Thursday, September 18, 2014

ஜப்பானிய பெண்கள் பல்கலைக் கழக குழுவினரால் ஏறாவூரில் பிரமாண்டமான சமையல் விருந்து!


ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியர்களும் மாணவிகளும் புதனன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு வந்து சுவையான ஜப்பானிய சமையல் செய்து கிராமத்தவர்களுக்குப் பரிமாறி மகிழ்ந்தனர்.


ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் உள்ள முஸ்லிம் கிராமத்தவர்களுடன் தங்கி அவர்களது நிகழ்வுகளிலும் இந்த ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி யும் அப்பல்கலைக் கழகத்தின் 9 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஜப்பானிய பல்கலைக் கழக குழுவினரால் பெரிய விருந்து வைபவம் ஒன்று ஏறாவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி, நிருவாக அதிகாரி நிச்சிக்கோ டொகுமாரு  ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், சர்வோதய சர்வதேச பிரிவின் இணைப்பாளர் பந்துல செனவிரெட்ன  உட்பட கிராம பொது மக்கள், நிறுவனங்களின் பிரதி நிதிகள், அரச அதிகாரிகள் என அநேகம் பேர் கலந்து கொண்டனர்.
சர்வோதய இயக்கத்தின் சர்வதேச கற்கைகளுக்கான பிரிவு இந்த பரஸ்பர நட்புறவுடனான வெளிக்கள கற்றல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஜப்பானிய புக்குஓகா பெண்கள் பல்கலைக்கழக  பேராசிரியர்களும் மாணவிகளும் இலங்கையின் மட்டக்களப்பு உட்பட வேறு சில மாவட்டங்களிலும் 3 வாரங்கள் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் கிராமங்களில் மக்களோடு மக்களாகத் தங்கியிருந்து தமது நட்புறவு கற்றலை மேற்கொள்வர் என்று ஜப்பானிய புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி தெரிவித்தார்.

source :Virekesari

No comments:

Post a Comment