Wednesday, July 22, 2015

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு பிரித்தானியா பூரண ஆதரவு



-வடமலை ராஜ்குமார், ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எஸ்.எம்.யாசீம்,எஸ்.சசிகுமார்
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு பிரித்தானியா முழு ஆதரவு வழங்குமென்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை அவரது காரியாலயத்தில் ஜேம்ஸ் டொரிஸ் நேற்று புதன்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் இவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்ட விடயங்களை கவனத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, யுத்தப் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி, கைம்பெண்களுக்கு சுயதொழில் வசதி மற்றும் வாழ்வாதார உதவி,  தொழிற்பேட்டைகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்னும் சவாலுக்கு தனது நாடு சார்பாக தான் பூரண ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
- See more at: http://www.tamilmirror.lk/150684#sthash.BPdVpocU.dpuf

No comments:

Post a Comment