Showing posts with label ஐந்தூரிய பூச்செடி வளர்ப்பு. Show all posts
Showing posts with label ஐந்தூரிய பூச்செடி வளர்ப்பு. Show all posts

Thursday, March 6, 2014

மட்டகளப்பில் மனதை கவர்ந்த ஐந்தூரிய பூச்செடி வளர்ப்பு




-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, பெரிய உப்போடை பிரதேசத்தில் வசிக்கும்; ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தரான சசிகலா ரட்ணகுமார் என்பவர் ஐந்தூரியம் பூச்செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றார்.

1990ஆம் ஆண்டிலிருந்து இதில் ஆர்வம் காட்டிவரும் இவர்,  முதலில் ஒரேயொரு ஐந்தூரியம் பூச்செடியை வளர்க்கத் தொடங்கி தற்போது சுமார் கால் ஏக்கரில்  500 இற்கும் அதிகமான 23 வகையான ஐந்தூரிய பூச்செடிகளை வளர்த்துவருகிறார். சிவப்பு, றோஸ்,  வெள்ளையென பல வர்ணங்களில் துலங்கும் ஐந்தூரியம் பூங்காவிற்குள் நுழைந்தால் குட்டி நந்தவனமாக காட்சி தருகிறது.

இதனைத் தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள இவர், தினமும் 300 முதல் 1,000 ரூபாவரை இதன் மூலம்  சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த பூச்செடிகளை தனியாகவும் பூச்சாடிகளிலும் வளர்த்துவருவதுடன்,  இவை  திருமண விழாக்கள்,  மரணச்சடங்குகள், வரவேற்பு வைபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் விற்பனையாவதாகவும் அவர் கூறினார்.

இவரது குட்டி நந்தவனத்தை பலரும்  பார்வையிட்டு வருகின்றனர்.