Monday, March 25, 2013

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் புதிதாகத் திறக்கப்பட்டது


மட்டக்களப்பு கல்லடிப்பாலம் புதிதாகத் திறக்கப்பட்டது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 மார்ச், 2013 - 15:47 ஜிஎம்டி
இலங்கையில் மிகவும் நீண்ட பாலமாக ஒரு காலத்தில் திகழ்ந்த, மட்டக்களப்பு கல்லடி பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்த சாலையில் மட்டக்களப்பு நகருக்கு சிறிது தூரத்தில், மட்டக்களப்பில் இருந்து தெற்கே அம்பாறை செல்லும் வீதியில் அமைந்துள்ள இந்தப் பாலம் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
முதலில் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், அதன் உத்தரவாத காலம் முடிந்துவிட்டதால், அதன் பின்னர் பல வருடங்கள் கடந்து இப்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவிக்கு குறுக்காக அமைந்துள்ள இந்தப் பாலம், பாடுமீன் பாலம் என்றும் லேடி மன்னிங் பாலம் என்றும் அழைக்கப்பட்டுவந்தது.
இந்தப் பாலத்துக்கு அருகேதான் மட்டக்களப்பின் பிரபலமான ''பாடும் மீன்கள்'' குறித்தும் பலர் முன்னர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள்.

No comments:

Post a Comment