Tuesday, June 24, 2014

காத்தான்குடியில் அதிகளவான பேரீச்சம் பழம் அறுவடை

மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காணப்படும் பேரீச்சம் மரங்கள் காய்த்துள்ளதையடுத்து நேற்று மாலை அறுவடை செய்யப்பட்டது. 

மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்கள் பூத்தும் காய்த்தும், பழமாகியதையடுத்து அதனை அறுவடை செய்யும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
 
இதன் போது இவ்வருடம் அறுவடைக்கு தயாரான பேரீச்சம் பழங்களை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள் ஆகியோர் அறுவடை செய்தனர்.
 
 
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீத்தம் பழங்கள் அறுவடை செய்ய முடிந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Source : virakesari

No comments:

Post a Comment